அந்த படத்தில் நடிக்காதப்பா… விஜய் சேதுபதிக்கு ஓபனாக அட்வைஸ் செய்த இயக்குனர்!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

அந்த படத்தில் நடிக்காதப்பா… விஜய் சேதுபதிக்கு ஓபனாக அட்வைஸ் செய்த இயக்குனர்!

Advertiesment
அந்த படத்தில் நடிக்காதப்பா… விஜய் சேதுபதிக்கு ஓபனாக அட்வைஸ் செய்த இயக்குனர்!
, சனி, 10 அக்டோபர் 2020 (15:12 IST)
நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இந்த படத்தை பார்த்த பிறகு தங்களுடைய கருத்தை கூறுங்கள் என்று தெரிவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘விஜய் சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள். அவர் நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்துக்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா… நீரே எங்கள் சொத்து ஐயா. நமக்கெதுக்கு மாத்தையா? மாற்றையா?’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி – பாலோயர்ஸ் அதிர்ச்சி!