Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மார்கழி திங்கள்' படக்குழுவை வாழ்த்திய சீமான்

margazhi Thingal
, சனி, 23 செப்டம்பர் 2023 (19:12 IST)
தாஜ்மஹால் படத்தின்  மூலம் 1999 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. வருஷமெல்லாம் வசந்தம், கடல்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தற்போது  தனது தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இப்போது மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, சுசீந்திரன் தன்னுடைய வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த  நிலையில், இப்படத்தின் உன் நினைவால் என்ற பாடலை சீமான் தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:  

‘’அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், ஆருயிர் இளவல் மனோஜ்குமார் பாரதிராஜா இயக்கத்தில், இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் #மார்கழி_திங்கள் திரைப்படத்தில் இருந்து, இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன் இசைஞானி இளையராஜா அவர்களின் மெல்லிசையில் உருவாகியுள்ள உன்_நினைவால் பாடல் காணொலியை வெளியிடுவதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

#மார்கழி_திங்கள் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற படக்குழுவினர் அனைவருக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!’’ என்று தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்ப ஒரிஜினல் சந்திரமுகியே வந்துட்டா.. ‘சந்திரமுகி 2’ டிரைலர்..!