Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்புவுடன் கூட்டணி வைத்த சீமான்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (12:49 IST)
எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட குஷ்பு - சீமான் இருவரும், ‘டிராபிக் ராமசாமி’ படத்துக்காக இணைந்துள்ளனர்.
சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்கி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
 
டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க, அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன் உள்பட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அரசியலிலும், கொள்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் குஷ்பு மற்றும் சீமான் இருவரும் இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர்.  கதையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான வேடத்தில் இவர்கள் இருவரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments