Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியிடம் தொலைபேசியில் பேசிய சீமான்… பின்னணி என்ன?

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (08:29 IST)
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவானது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். இதனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தை விடக் குறைவான வசூலையே வேட்டையன் பெற்றது. ஆனாலும் ரஜினி மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படம் பார்த்துவிட்டு பாராட்டிப் பேசியிருந்தார். மேலும் “நான் மேடைகளில் பேசுவதைதான் இயக்குனர் இந்த படத்தில் பேசியுள்ளார்” என்றெல்லாம் பாராட்டி இருந்தார். இந்நிலையில் படம் குறித்து அவர் ரஜினிகாந்திடமும் தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments