Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொல்லிதான் வினோத் இனிஷியல மாத்தினார்… சீமான் பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (14:11 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த படத்தின் சமீபத்தைய போஸ்டர்களில் இயக்குனர் வினோத்தின் பெயரில் இனிஷியல் மாற்றி அ.வினோத் என மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் “என் தம்பி வினோத் எல்லா படத்துலயும் அவர் பெயர H வினோத்துன்னு போட்டார். நான்தான் அவரை சந்தித்த போது இனிஷியலை தமிழில் போட சொன்னேன். அவர் அதுக்கப்புறம் மாத்தி அ. வினோத்னு போஸ்டர்ல போடுறார்” எனப் பேசியுள்ளார்.

வினோத்தின் அப்பா பெயர் ஹரிமுர்த்தி என்பதை அரிமூர்த்தி என மாற்றி அ என்ற எழுத்தை தலைப்பெழுத்தாக போட்ட புது போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் 'குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது? சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

பாரதிராஜாவை பாட்டு பாடி சோகத்தில் இருந்து மீட்கும் கங்கை அமரன்… இணையத்தில் பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

மகனுக்கு கார் ரேஸ் பயிற்சி தரும் அஜித்.. அசத்தல் வீடியோ

தங்க கடத்தல் நடிகை ரன்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்கும் கணவர்.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments