Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாரின் குற்றப்பரம்பரை…. படத்தில் இணையும் முன்னணி நடிகர்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (18:09 IST)
குற்றப்பரம்பரை கதையை சசிகுமார் படமாக்க உள்ளதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை பல வருடங்களாக எடுக்கவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சி செய்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை நடைபெற்று போஸ்டரும் வெளியானது. ஆனால் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்றார். அப்போதும் அவரால் படமாக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அது சம்மந்தமான கதையை திரைப்படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

ஐந்தாவது நாளில் அதல பாதாள வசூல்… இந்தியன் 2 வசூலையாவது தொடுமா தக் லைஃப்?

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments