Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ்-சினேகா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு:

தனுஷ்-சினேகா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு:
, ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (15:46 IST)
'விஸ்வாசம்' படத்தை தயாரித்து மிகப்பெரிய லாபம் பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை தயாரித்து வருகிறது. துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் தனுஷ், சினேகா நீண்ட இடைவெளிக்கு பின் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
webdunia
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 34வது படமான இந்த படத்தின் டைட்டில் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விவேக் -மெர்வின் இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் புதுப்படத்தின் தோற்றம் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி