Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யஜோதி நிறுவனத்தின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (17:44 IST)
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது
 
அஜித் நடித்த விவேகம், விசுவாசம், தனுஷ் நடித்த பட்டாசு உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் சத்யஜோதி நிறுவனம். இந்நிறுவனம் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை அஸ்வின் ராம் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா என்பவர் நடிக்கிறார். மேலும் நெப்போலியன், விதார்த், சசிகுமார், ஊர்வசி உள்பட பலர் நடித்து வருகின்றனர். மாதேஷ் மாதேஷ் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் தினேஷ் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
 
இந்த நிலையில் சற்று முன்னர் சத்யஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘அன்பறிவு’ என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்த பர்ஸ்ட் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments