Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனுக்காக பெண்ணாக மாறிய சதீஷ்!? – தங்கம் என கொஞ்சிய பார்த்திபன்!

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (17:00 IST)
நடிகர் சதீஷ் பெண் வேடமிட்டு புகைப்படத்தை அனுப்பி இயக்குனர் பார்த்திபனிடன் சான்ஸ் கேட்ட விவகாரம் வைரலாகியுள்ளது.

இயக்குனர் பார்த்திபனே நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பரவலான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் பலர் பார்த்திபன் அடுத்து என்ன படம் இயக்க போகிறார் என்று கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட பார்த்திபன் ”வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில்,அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு Fitness freak -ஆன 25 வயது பெண் (சிரித்தால்... சில பசங்களையாவது சீரியஸாக்கி I c u- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஒரு பெண் போல வேடமிட்டு அதை புகைப்படமெடுத்து பார்த்திபனுக்கு ட்விட்டரில் அனுப்பிய நடிகர் சதீஷ் “இது ஓகேவா சார்?” என்று கேட்டுள்ளார். சதீஷின் இந்த ட்வீட்டை பார்த்து பலர் பயங்கரமாக சிரித்துள்ளார்கள். ஆனால் பார்த்திபன் அப்படி சிரிக்கவில்லை.

மாறாக, சதீஷுக்கு பதிலளித்த அவர் “இவ்வளவு அழகை வைச்சி என்ன செய்றது ? சதீ(டீ)ஷ்கர் பொண்ணு மாதிரி இருக்கு! தலைகானில பஞ்சு இருந்தா தூங்கலாம்,தங்கம் இருந்தா ?” என்று புகழ்ந்துள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படம் தோல்விதான்.. ஆனா நான் காரணம் இல்ல! - கைவிரித்த முருகதாஸ்!

மூன்றே நாளில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமான ‘கூலி’!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதப் போகிறதா சூர்யாவின் ‘கருப்பு’?

மூன்றாம் நாளில் ‘கூலி’ படத்தின் வசூல் எவ்வளவு?

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரின் படத்துக்கு ‘No’ சொன்ன ஃபஹத் பாசில்… காரணம் இதுதானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments