Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய் நடித்த நீயா 2 படத்துக்குத் தடை – நீதிமன்றம் உத்தரவு !

ஜெய் நடித்த நீயா 2 படத்துக்குத் தடை – நீதிமன்றம் உத்தரவு !
, சனி, 1 ஜூன் 2019 (10:47 IST)
ஜெய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான நீயா 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய், ராய் லக்ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேதரின் தெரஸா ஆகியோர் நடித்த நீயா படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியானது. எத்தன் படத்தின் இயக்குனர் சுரேஷ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களப் பெற்ற இந்தப் படம் ரசிகர்களைக் கவரவில்லை.

இதையடுத்து இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய் கோத்தாரி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் ‘நீயா படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதர் தனக்குத் தரவேண்டிய 35 லட்சத்தைத் தராமல் நீயா 2 படத்தின் தொலைக்காட்சி உரிமை விற்க தடைவிதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை நீயா-2 திரைப்படத்தின் உரிமையை விற்பனை செய்வதை தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதுகுல எங்கமா ட்ரெஸ்ஸ காணோம்! ராஷிகண்ணா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்!