Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (09:30 IST)
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. இதையடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த  ஒரு படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. அதன் பின்னர் “டூரிஸ்ட் பேமிலி” என என்று இந்த படத்துக்கு டைட்டில் அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் வெளியானது. இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு ரகசியமாகக் கிளம்புவது போலவும் அதில் நடக்கும் சொதப்பல்களுமாக அந்த டீசர் கவனம் பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. அதே தேதியில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments