Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகுமார் & சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘நாநா’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

சசிகுமார் & சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘நாநா’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (13:52 IST)
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் அயோத்தி திரைப்படம் ரிலீஸாகி ஹிட்டான நிலையில், அடுத்து அவரின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் அவர் சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படமான ‘நாநா’வில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்துள்ளார். இந்தப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பை ஆகியப் பகுதிகளில் நடந்தது.

படத்தில் பாரதிராஜா, ரேஷ்மா வெங்கடேஷ், பக்ஸ், பிரதீப் ராவத், எஸ்கே கனிஷ்க், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். முதன் முதலாக சசிகுமார் போலீஸாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளார். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாட்களில் ரூ.125 கோடி வசூல் செய்த ஜெயிலர் .. இன்று 200 கோடியை எட்டுமா?