Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரிலீஸ் ஆகும் சுப்ரமண்யபுரம் திரைப்படம்… இயக்குனர் சசிகுமார் அறிவிப்பு!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (07:19 IST)
2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.

படத்தில் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறையவடைந்ததை ரசிகர்கள் கொண்டாட, இயக்குனர் சசிகுமார் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த படம் மீண்டும் ரி ரிலீஸ் ஆக உள்ளதாக சசிகுமார் இப்போது அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments