Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஓவர்… படக்குழு தந்த அப்டேட்!

நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஓவர்… படக்குழு தந்த அப்டேட்!

vinoth

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:09 IST)
நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்களில் ஜவான் தவிர எந்த படமும் வெற்றிப் படமாக அமையவில்லை.இந்நிலையில் இப்போது ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோருடன் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘டெஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்போது சென்னையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் என்பதால் விரைவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த பட ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு  வீடியோ ஒன்றை அறிவித்துள்ளது.  இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை ஏமாற்றிய மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்.. வசூல் இவ்வளவுதானா?