Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா 2 படத்துக்கு இத்தனைக் கோடி பட்ஜெட்டா? மிரளவிடும் பா ரஞ்சித் & ஆர்யா!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (07:45 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்தை முடித்த பின்னர் சார்பட்டா 2 திரைப்படத்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு 90 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சார்பட்டா பரம்பரை படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்துக்கு இவ்வளவு மிகப்பெரிய பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

நயன்தாரா படத்தைத் தள்ளிவைத்த நித்திலன்.. மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments