Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்காரு வாரிபாட்டா உலக முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்… மகேஷ் பாபுவின் பெஸ்ட்!

webdunia
வெள்ளி, 13 மே 2022 (18:22 IST)
மகேஷ் பாபு நடிப்பில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் உருவான சர்காரு வாரிபாட்டா திரைப்படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்களால் மே 12க்கு தள்ளிவைக்கபப்ட்டது.

இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அந்த படம் ரிலீஸானது. இந்நிலையில் முதல்நாளில் இதுவரை மகேஷ் பாபு திரைப்படம் வசூலிக்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் முதல் நாளில் 36.63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் உலகளவில் முதல்நாளில் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மகேஷ் பாபுவுன் சினிமா கேரியரில் இதுதான் அதிக வசூல் என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆச்சார்யா தோல்வி எதிரொலி… ஒரு மாதத்துக்குள் ஓடிடியில்…. வெளியான அறிவிப்பு!