'இன்று சர்கார் டீசர்'-டுவிட்டரில் சரவெடி போட்டு கொண்டாடும் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (14:56 IST)

சர்கார் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாக  உள்ளதை முன்னிட்டு #SarkarTeaserDay என்ற ஹேஸ்டேக் உருவாக்கி விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 

கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சர்கார் பட இசை வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. விஜய் அரசியல் குறித்து பேசியதால் படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

இன்று மாலை 6 மணிக்கு சர்கார் டீசர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள்,#SarkarTeaserDay என்ற ஹேஸ்டேக் உருவாக்கி் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments