கைது பயமா? முன் ஜாமினுக்கு முருகதாஸ் மனுத்தாக்கல்

வெள்ளி, 9 நவம்பர் 2018 (11:09 IST)
சர்கார் பட விவகராம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் தற்போது முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 
 
சர்கார் பட விவகாரத்தால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் நேற்று நள்ளிரவும் போலீஸார் குவிந்ததால் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், வழக்கமான ரோந்து பணிக்காவே போலீஸார் சென்றதாக பின்னர் கூறப்பட்டது. 
 
அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல் துறையினர் எனது வீட்டின் கதவை பலமுறை தட்டினர். நான் தற்போது வீட்டில் இல்லை. தற்போது எந்த காவலரும் எனது வீட்டின் முன்பு இல்லை என பதிவிட்டார். 
 
இந்நிலையில், அவர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முன் ஜாமின் மனுக்கான விசாரணை பிற்பகல் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING