Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

களவாணி 2 ரிலிஸ் பிரச்சனையில் புதுத்திருப்பம் ! – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம் !

களவாணி 2 ரிலிஸ் பிரச்சனையில் புதுத்திருப்பம் ! – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம் !
, புதன், 24 ஏப்ரல் 2019 (10:19 IST)
களவாணி 2 படத்தின் ரிலிஸுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சற்குணம் கூறிய குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கமளித்துள்ளார்.

கிராமத்துப் படம் என்றாலே கோயம்புத்தூர், மதுரை, தேனி என்று இருந்த தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றி தஞசாவூர் கிராமத்து வாழ்க்கையை அசலாக பதிவு செய்தப் படம் களவாணி. இதனை புதுமுக இயக்குனரான சற்குணம் இயக்க விமல், ஓவியா, சரண்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியுள்ளது.

ரிலிஸூக்கு தயாராக உள்ளநிலையில் இப்படத்திற்கு ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனரான சற்குணம் வீடியோ ஒன்றின் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ படத்துக்குத் தடை வாங்கியுள்ளவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. இது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டபோது அது விமல் சம்மந்தமான பிரச்சனையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். விமலுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை என்பது எனக்குத் தெரியாது. நீதிமன்றத்தின் மீது நான் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.  எனக்கான நீதியையும் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ‘ நடிகர் விமல் என்னிடம் அவர் தயாரித்த மன்னர் வகையறா படத்திற்காக 3 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் நீண்ட காலமாக அதைத் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் விழாவின் போது களவாணி 2 படம் தயாரிக்கப்போவதாகவும், அதற்காக பண உதவியை செய்தால் மன்னார் வகையறா மற்றும் களவாணி 2 படத்திற்காக வாங்கிய மொத்தக் கடனையும் திருப்பித்தருவதாகக் கூறினார். நான் களவாணி 2 படத்தை முதல் காப்பி அடிப்படையில் எனக்குத் தயாரித்துத் தர வேண்டும் என விமல் மற்றும் சற்குணம் இருவரிடமும் கூறினேன். ஆனால் இப்போது படவேலைகள் முடிந்து ரிலிஸுக்கு தயாரான போது படத்தை தன் பெயரில் ரிலிஸ் செய்ய முயற்சி செய்கிறார் சற்குணம். இது பற்றி நான் எச்சரிக்கை செய்தும் இருவரும் பதில் கூறாததால் நீதிமன்றத்தை அனுகி தடை பெற்றுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் களவாணி 2 படவிவகாரம் இன்னும் சிக்கலாகியுள்ளது. இது சம்மந்தமான விசாரணை ஜூன் 10 ஆம் தேதி வர இருக்கிறது. அதுவரை படத்டஹி ரிலிஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல காமெடி நடிகர் வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை