Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்தார் ஹிட்… இயக்குனருக்கு விலையுயர்ந்த காரைப் பரிசளித்த கார்த்தி!

சர்தார் ஹிட்… இயக்குனருக்கு விலையுயர்ந்த காரைப் பரிசளித்த கார்த்தி!
, வியாழன், 3 நவம்பர் 2022 (15:25 IST)
சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது.

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.

விருமன், பொன்னியின் செல்வனை அடுத்து சர்தாரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு டொயோடா கார் ஒன்றை கார்த்தி பரிசளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் உயர்ந்த கட்டிடத்தில் ஒளிர்ந்த சூப்பர் ஸ்டார் முகம்!