கார்த்தியின் சர்தார் வெற்றி… பார்ட் 2 வை அறிவித்த படக்குழு!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (10:07 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம்  தீபாவளி பண்டிகையொட்டி நேற்று முன் தினம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சர்தார் திரைப்படம் முதல்நாளில் சுமார் 6.91 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த வசூல் கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 4 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாயும் உலகளவில் 42 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்து விடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த வெற்றிவிழாவில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் சர்தார் படத்தின் இறுதிக் காட்சியையும் வெளியிட, அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் 8 மணிநேர வேலை…. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு!

ஜனவரி 23 ஆம் தேதி ‘கருப்பு’ ரிலீஸ்… இறுதி முடிவை எடுத்த படக்குழு!

ரசிகர்களைக் கவர்ந்ததா கீர்த்தி சுரேஷின் டார்க் காமெடி ‘ரிவால்வர் ரீட்டா’… முதல் நாள் வசூல் விவரம்!

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணையும் பாலிவுட் நடிகை!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் மம்மூட்டி… தயாரிப்பாளராக கமல்ஹாசன்?

அடுத்த கட்டுரையில்
Show comments