Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்தார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?.... வெளியான விவரம்!

சர்தார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?....  வெளியான விவரம்!
, ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:51 IST)
கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம்  தீபாவளி பண்டிகையொட்டி நேற்று முன் தினம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சர்தார் திரைப்படம் முதல்நாளில் சுமார் 6.91 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த வசூல் கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கார்த்தி தன் தன் டுவிட்டர் பக்கத்தில், மக்களே, சர்தார் படத்தை வெற்றி அடைய செய்ததற்காக  உங்களுக்கு மிக நன்றிகள்….உங்கள் பாராட்டுகளில் படக்குழு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் வாத்தி ரிலீஸ் தள்ளி போகிறதா?... பின்னணி என்ன?