Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலாலா… லல லாலாலா… சூர்யவம்சம் 2 தொடங்க வாய்ப்பு –சரத்குமார் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 மே 2023 (15:26 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வெற்றி பெற்ற படங்களில் ‘சூர்யவம்சம்’ திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. சரத்குமாரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் நடிகர் ஆக்கியதில் இந்த படத்துக்கு பெரும்பங்கு உண்டு. 1997 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. திரையரங்கில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்தது. இன்றளவும் தொலைக்காட்சி, யுட்யூப் என ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றி நடிகர் சரத்குமார் பேசி இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது அவர் “சூர்யவம்சம் 2 படத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. கதை உறுதியானால் படத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments