உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வேண்டும்: பிரபல நடிகர் கோரிக்கை

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (20:57 IST)
உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வேண்டும்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கின்போது பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இன்னும் ஒரு சில கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து போல் உடற்பயிற்சிக் கூடங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போல உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் சரத்குமாரின் இந்த வேண்டுகோளை தமிழக அரசு ஏற்று உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

தர்மேந்திரா உயிருடன் தான் உள்ளார். தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம்: ஹேமாமாலினி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்

அடுத்த கட்டுரையில்
Show comments