விஷால் நடித்து வரும் சண்டக்கோழி 2 படத்தில் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	 
	லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாடலுடன் தொடங்கியுள்ளது. 
	 
	அங்கமாலி டைரீஸ் என்ற படத்தில் நாயகனுக்கு இணையாக நெகடிவ் கதாபாத்திரத்தில் கலக்கியவர் சரத்குமார் என்கிற புதுமுகம். 
	 
	மேலும் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம், போக்கிரி சைமன் என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
	 
	இந்நிலையில் மலையாள நடிகர் சரத்குமார் சண்டக்கோழி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.