Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று சென்னை வருகிறது சரத்பாபு உடல்.. பொதுமக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு..!

இன்று சென்னை வருகிறது சரத்பாபு உடல்.. பொதுமக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு..!
, செவ்வாய், 23 மே 2023 (08:18 IST)
பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவருடைய உடல் இன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு நேற்று காலமானார். இதனை அடுத்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரை உலக பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள சரத்பாபு வீட்டிற்கு இன்று அவரது உடல் எடுத்து செல்லப்படும் என்றும் சென்னை மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் சரத் பாபுவின் இறுதிச்சடங்கு இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சரத் பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரி ஹீரோவாக நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் ஷுட்டிங் அப்டேட்!