நடிகை சரண்யா மோகனின் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகை சரண்யா மோகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக நடித்து தற்போது தனது காதலரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர் யாரடி நீ மோகினி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கச்சியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது இவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் குண்டாக இருக்கிறார். இதைக்கண்டு அனைவரும் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர். எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் அனைவரும் வியக்கிறார்கள். தற்போது அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.