யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (10:07 IST)
யுவனும், சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து ஒரு படத்துக்கு இசையமைக்க இருக்கின்றனர். 
யுவன் சங்கர் ராஜாவின் உறவினர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பேய்ப்பசி’. யுவனின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நமிதா, அம்ரிதா ஐயர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை  இயக்குகிறார். இவர், தியாகராஜன் குமாரராஜவிடம் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றியவர்.
 
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடுகிறார். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சந்தோஷ்  நாராயணனும் இசையமைக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பதால், இந்தப் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!

ரஜினி, தனுஷ் வரிசையில் ப்ரதீப்… பாராட்டு மழைப் பொழிந்த நாகார்ஜுனா!

ஜனநாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய அஜித் படத் தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments