Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜகமே தந்திரம் படத்துக்காக புதிய முயற்சிகளில் ஈடுபட்டேன்… இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

ஜகமே தந்திரம் படத்துக்காக புதிய முயற்சிகளில் ஈடுபட்டேன்… இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
, சனி, 12 ஜூன் 2021 (08:13 IST)
ஜகமே தந்திரம் படத்தின் இசைக்காக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் இணைந்துள்ளார். படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசியுள்ள அவர் ‘இந்த படத்துக்காக நிறைய புதிய முயற்சிகளை மேற்கொண்டேன். இந்த படமே கிட்டத்தட்ட பிரிட்டிஷ் படம் போல என்பதால் அங்குள்ள இசைக்குழுவினரை வைத்து இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டோம். அதே சமயம் இந்த படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக தெரியக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினோம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் செல்வராகவன்… சாணிக்காயிதம் பட புகைப்படங்கள்!