ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்தை இயக்கும் சௌந்தர்யா ரஜினியின் உதவியாளர்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் மற்றும் தனுஷ் நடித்த ’விஐபி 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்பது தெரிந்தது. இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’விஐபி-2’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சந்தோஷ் என்பவர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக கல்லூரி மாணவி ஒருவர் நடிகையாக அறிமுகமாகி உள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது 
 
அஜித்தின் விஸ்வாசம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments