Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தனத் தேவன் படத்தைக் கைப்பற்றிய ஆர்யா! பரபரப்பாக நடக்கும் பணிகள்!

சந்தனத் தேவன் படத்தைக் கைப்பற்றிய ஆர்யா! பரபரப்பாக நடக்கும் பணிகள்!
, சனி, 20 நவம்பர் 2021 (17:24 IST)
அமீர் இயக்கத்தில் சந்தனத் தேவன் படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இயக்குனர் அமீர் ஆதிபகவன் படத்துக்கு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் அமீர் நடிப்பில் சந்தனத் தேவன் என்ற படத்தை அறிவித்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகளால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தை நடிகர் ஆர்யாவே தன்னுடைய ஷோ பீப்பிள் நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார்.

இதையடுத்து படப்பிடிப்புக்கான வேலைகளை இயக்குனர் அமீர் தொடங்கிவிட்டாராம். சமீபத்தில் யுவன் இசையில் சினேகன் வரிகளில் பாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் ஷூட்டிங்… மறுபடியும் முட்டிக்கொண்ட விக்ரம் & கௌதம் மேனன்!