Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின்’’ பிஸ்கோத்’’ பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (16:29 IST)
சந்தானம் நடித்து வரும் பிஸ்கோத் படத்தின் முதல் பாடல் வரும்23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும்  என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் வடிவேலு நடிப்பில் வெளியான பெரும் வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இப்படத்தில் இரட்டைவேடத்தில் வடிவேலி தூள்கிளப்பியிருப்பார். இந்நிலையில் வடிவேலுக்கு இம்சை அரசன் போல் நடிகர் சந்தானத்துக்கு பிஸ்கோத் என்று இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.

நடிகர் சந்தானம் தற்போது இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தாரா அலிஷா பெர்ரி ஸ்வாதி முப்பலா போன்றோ நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இதில், 80ன்களில் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இக்காட்சியில் சந்தானம் ராஜாவாக நடித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கண்ணன் கூறியுள்ளதாவது, வடிவேலுக்கு இம்சை அரசன் போல் நடிகர் சந்தானத்துக்கு பிஸ்கோத் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. எனவே இப்படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments