Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
, திங்கள், 16 மார்ச் 2020 (19:32 IST)
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கிய ’ஏ1’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதே இயக்குனரின் இயக்கத்தில் சந்தானம் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
சந்தானம் ஜோடியாக அனைகா சோட்டி நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பார்மாலிட்டிக்கு தொடங்கினாலும் வரும் 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்று கூறப்படுவதால் அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
‘ஏ1’ படம் போலவே இந்த படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு ஜூலிக்கு குதூகலத்த பார்த்தீங்களா - வீடியோ!