Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் குறையை கிண்டல் செய்த சந்தானம்… சர்ச்சை ஆகும் டிக்கிலோனா காமெடி!

உடல் குறையை கிண்டல் செய்த சந்தானம்… சர்ச்சை ஆகும் டிக்கிலோனா காமெடி!
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:51 IST)
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

சந்தானம் மூன்று வேடத்தில் நடித்த ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தானம் ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இப்போது படத்தில் சந்தானம் மாற்றுத்திறனாளி ஒருவரை கிண்டல் செய்து பேசும் வசனத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து தன் படங்களில் சந்தானம் இதுபோல body shaming வசனங்களை பேசி வருவது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன், விஜய்சேதுபதி, பாண்டிராஜ் குறித்து ஹர்பஜன்சிங் டுவிட்!