Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னை ஆளாக்கிய இயக்குனரையே டீலில் விட்ட சந்தானம் – இப்படி செய்யலாமா?

தன்னை ஆளாக்கிய இயக்குனரையே டீலில் விட்ட சந்தானம் – இப்படி செய்யலாமா?
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:47 IST)
நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் இப்போது அதில் இருந்து பின் வாங்கியுள்ளாராம்.

திரைப்படங்களில் பத்தோடு பதினொன்றாக வலம் வந்துகொண்டிருந்த முன்னணி காமெடி நடிகராகவும் ,அதன் பின் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களும் கொடுத்து மார்க்கெட்டை ஏத்திவிட்டவர் இயக்குனர் எம் ராஜேஷ். இடையில் சந்தானம் ஹீரோவானதால் அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதற்கிடையில் ராஜேஷ் இயக்கிய படங்கள் எல்லாம் அட்டர் பிளாப் ஆகின. இதனால் அவருக்கு இப்போது கைவசம் படங்களே இல்லாத நிலை உருவானது.

அதனால் சந்தானம் தான் அவர் படத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளாராம். இதனால் வேறு வழியில்லாமல் ராஜேஷ் ஜி வி பிரகாஷை வைத்து சன் பிக்சர்ஸுக்காக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். சந்தானம் கடைசி நேரத்தில் கைவிட்டதால் ராஜேஷ் அதிருப்தியில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாவுக்காக சூர்யா செய்த உதவி – உருவாகிறது பிரம்மாண்ட திரைப்படம்!