ஜெயிலர் 2 படத்தில் ரஜினியோடு இணைந்து நடிக்கிறாரா சந்தானம்?

vinoth
செவ்வாய், 27 மே 2025 (07:21 IST)
தன்னுடைய 73 ஆவது வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்து சந்தானம் இந்த படத்தில் நடித்தால் 11 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் சந்தானம் ஆகிய இருவரையும் நாம் திரையில் மீண்டும் சேர்ந்து பார்க்கலாம். 2014 ஆம் ஆண்டு இருவரும் லிங்கா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments