Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யிடம் கால்ஷீட் கேட்டாரா சஞ்சய்…. கோலிவுட்டில் பரவும் செய்தி!

விஜய்யிடம் கால்ஷீட் கேட்டாரா சஞ்சய்…. கோலிவுட்டில் பரவும் செய்தி!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:16 IST)
விஜய்யின் மகன் சஞ்சய் தனது தந்தையை இயக்க ஒரு வாய்ப்பு கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் இப்போது தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார். அவர் படங்கள் வரிசையாக வசூல் சாதனைகள் செய்து வருகின்றன. தனது அடுத்த படத்தில் நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் தனது தந்தையை வைத்து ஒரு கதையை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் இதுபற்றி கூறியுள்ளாராம்.

சஞ்சய் கனடாவில் சினிமா சம்மந்தபட்ட படிப்பை முடித்துள்ளார் என்பதும் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து எதுவும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது விண்ட்டேஜ் புகைப்படத்தை வெளியிட்ட லஷ்மி ராமகிருஷ்ணன்!