Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைகிறாரா சஞ்சய் தத்?

vinoth
செவ்வாய், 24 ஜூன் 2025 (14:04 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதே போல கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் சஞ்சய் தத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ‘லியோ’ படத்தில் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்திலேயே இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக மடோனா செபாஸ்டியனும் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு.. நாங்கள் கொடுத்தது வேறு.. ‘தக்லைஃப்’ படத்திற்காக வருத்தம் தெரிவித்த மணிரத்னம்..

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments