தல அஜித்தின் வலிமை’யில் இணைகிறாரா சஞ்சய்தத்?
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டு பின்னர் அவரே அந்த படத்தில்தான் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்தார்
இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் போனிகபூர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த செய்தி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது