பிரபல இந்தி நடிகரான சஞ்சய் தத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது கோவமாக உள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் முன்னாபாய் எம்பிபிஎஸ், கல் நாயக், சாஜன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபலமான ஹீரோ சஞ்சய் தத். தற்போது சஞ்சய் தத் இந்தி மட்டுமல்லாது அனைத்து மொழி படங்களிலும் வில்லன் ரோல்களை ஏற்று நடித்து வருகிறார். முக்கியமாக கேஜிஎஃப் படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் இவருக்கு வில்லன் கதாப்பாத்திரங்கள் அதிகமாக கிடைக்கிறது.
அப்படியாக கடந்த சில ஆண்டுகள் முன்னதாக வெளியான விஜய்யின் லியோ படத்திலும் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஆனால் அதில் மற்ற படங்களை போல சஞ்சய் தத்துக்கு அதிகமான ஆக்ஷன் சண்டை காட்சிகள் அளிக்கப்படவில்லை.
சமீபத்தில் ”கே டி: தி டெவில்” பட நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் தத் “நான் லோகேஷ் கனகராஜ் மீது கோவமாக இருக்கிறேன். லியோ படத்தில் எனக்கு பெரிய கதாப்பாத்திரம் கொடுக்கவில்லை. என் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் உப்பென்னா, ஆமிர் கான், நாகர்ஜூனா என பல மொழி ஸ்டார் நடிகர்களும் நடித்து வரும் நிலையில், சஞ்சய் தத்தின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K