ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் அமீர்கான் நடிப்பதை சீக்ரெட்டாக வைத்திருந்தது படக்குழு. ஆனால் திடீரென்று தற்போது அமீர்கான் தாகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதிபடுத்தியது. இப்போது திடீரென அப்டேட்டை வெளியிடக் காரணம் இன்னும் வட இந்திய திரையரங்க விநியோக உரிமை விற்கப்படவில்லை என்பதுதானாம். அதனால் அமீர்கான் படத்தில் இருப்பது உறுதியானால் படத்தை எளிதாக விற்கலாம் என்ற முடிவில்தான் இதை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.