Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் அதுக்கு சரிபட்டு வரமாட்டாரே… தளபதி 67 படத்தில் கமிட்டான பாலிவுட் நடிகரின் பாலிசி!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (15:23 IST)
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

மூனாரில் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 6 வில்லன்கள் இந்த படத்தில் இருப்பதாகவும், மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சஞ்சய் தத் இரவு நேரத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில்லை என்பதை நீண்ட ஆண்டுகளாக பாலிசியாக வைத்துள்ளாராம். ஆனால் லோகேஷோ பெரும்பாலும் தனது படத்தை இரவில்தான் படமாக்குவார். இதனால் ஷூட்டிங்கின் போது ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments