Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே ஜி எப் 2 படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சஞ்சய் தத்!

கே ஜி எப் 2 படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சஞ்சய் தத்!
, புதன், 8 டிசம்பர் 2021 (09:59 IST)
கேஜிஎப் 2 படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் அதில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சஞ்சய் தத் அதிரா கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை முழுவதுமாக முடித்து டப்பிங் பேசிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக் வித் கோமாளி அஸ்வினின் சர்ச்சை பேச்சு… கொதிக்கும் உதவி இயக்குனர்கள்!