ஒரே நபரால் எல்லா பணிகளும் செய்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.. கவனம் ஈர்க்கும் one man டிரைலர்!

vinoth
புதன், 19 நவம்பர் 2025 (13:35 IST)
நடிகர் சத்யராஜை வைத்து வெங்காயம் என்ற படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் அடுத்து நெடும்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி அதை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் ‘பயோஸ்கோப்’ என்ற திரைப்படத்தை  இயக்கினார்.

அந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு இயக்குனர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை வைத்து எப்படி படம் எடுக்கிறார் என்பதை சொல்வதாக உருவாக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்து வித்தியாசமான படங்களாக உருவாக்கி வரும் ராஜ்குமார் அடுத்து இதுவரை உலக சினிமாவில் யாரும் செய்யாத ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அவர் இயக்கத்தில் அடுத்து உருவாகும் “one man” திரைப்படத்தில் அவரே எல்லா வேடங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த படத்தின் மேக்கப், இசை, கிராஃபிக்ஸ், தயாரிப்பு என அனைத்துப் பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார். அதன் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்று விவாதப் பொருளாகியுள்ளது. பலரும் அந்த டிரைலரைப் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டைட்டில் அறிவிப்புக்கே இத்தனைக் கோடி ரூபாய் செலவா?... ஆச்சர்யப்படுத்தும் ‘வாரனாசி’ படக்குழு!

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… பிரபல நடிகை துளசி அறிவிப்பு!

முதல் படத்திலேயே டப்பிங் பேசும் ஸ்ரீலீலா… த்ரிஷா & நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments