Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னடத்தில் நடிகராக அறிமுகமாகும் சாண்டி மாஸ்டர்.. போஸ்டர் ரிலீஸ்!

கன்னடத்தில் நடிகராக அறிமுகமாகும் சாண்டி மாஸ்டர்.. போஸ்டர் ரிலீஸ்!
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:07 IST)
பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமானார் சாண்டி மாஸ்டர். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் படங்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றினார்.

அதையடுத்து விஜய்யின் லியோ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கிப்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கன்னட திரைப்படமான ரோஸி என்ற திரைப்படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திரத்தின் முதல் லுக்குடன் கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை ஷூன்யா இயக்க, யோகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். குருகிரண் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நானும் மனிதன்தான் என்னிடமும் தவறு இருக்கும்…” ராஜினாமா குறித்து திருப்பூர் சுப்ரமண்யன் விளக்கம்!