Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியை ஆட வைத்த சாண்டி:

Advertiesment
ரஜினியை ஆட வைத்த சாண்டி:
, புதன், 9 ஆகஸ்ட் 2017 (00:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது ரஜினியின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. 



 
 
ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரங்கில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் நடந்து வரும் இந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி நடனப்பயிற்சி அளித்து வருகிறார்.
 
சிம்புவின் 'வாலு', உதயநிதியின் 'கெத்து', 'மணல் கயிறு 2' உள்பட ஒருசில படங்களுக்கு நடனப்பயிற்சி செய்த சாண்டி நடனம் அமைக்கும் முதல் பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிக்கு முதன்முதலில் நடனப்பயிற்சி அமைப்பதில் பெருமைபடுவதாகவும், இந்த படம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை குழப்பும் மெர்சல் தயாரிப்பாளர்: சிங்கிள் டிராக்கில் இத்தனை சிக்கலா?