இறுதிகட்டத்தை நெருங்கிய ஜேசன் சஞ்சய் திரைப்படம்!

vinoth
புதன், 23 ஜூலை 2025 (13:46 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்த நிலையில் இலங்கைக்கு சென்றும் சில காட்சிகளைப் படமாக்கினர்.

இதையடுத்து தலக்கோணத்தில் முக்கியமானக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் மொத்த ஷூட்டிங்கையும் படக்குழு முடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments