Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (08:51 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.

இம்மாத இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளார். இதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி காட்சிகளை பயன்படுத்தக் கூடாது! நயன்தாரா டாக்குமெண்டரி மீது வழக்கு!

ஆஃபர் கொடுத்த பாண்டிராஜ்… நகராத லைகா புரொடக்‌ஷன்ஸ்…வேறு தயாரிப்பாளரிடம் செல்கிறாரா?

சீரியலுக்காக அஜித் படத்தையே வேண்டாம் என்று சொன்ன தேவயானி… இயக்குனர் திருச்செல்வம் பகிர்ந்த தகவல்!

மதராஸி படத்தின் க்ளைமேக்ஸை மாற்றியது இதனால்தான்… முருகதாஸ் பகிர்ந்த தகவல்!

சம்பளத்தைக் குறைக்க சம்மதித்தாரா அஜித்?... முன்னோக்கி நகரும் அடுத்த படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments