Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேற லெவல் பொண்ணு நீங்க... கோமாளி நடிகையை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
வேற லெவல் பொண்ணு நீங்க... கோமாளி நடிகையை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்ஸ்!
, புதன், 13 ஜனவரி 2021 (17:42 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.
 
தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
 
இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வரும் அவர் தற்போது ஆற்றங்கரையில் இறங்கி ஹோலா ஹூப் செய்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். சாம் யூ ஆர் அமேஸிங் என அவரது திறமையை பலரும் புகழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை ஓவர் டேக் செய்த விஜய் சேதுபதி - மாஸ்டர் விமர்சனம்!