Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலில் 100 கோடி ரூபாயை நெருங்கும் சமுத்திரக்கனி இயக்கிய தெலுங்கு படம்!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:51 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார்.  அதிலும் தெலுங்கு படங்களில் அவர் அதிகளவில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தமிழில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் சாய் தேஜும் நடித்துள்ளனர். தெலுங்கிற்காக பல மாற்றங்களை திரைக்கதையில் செய்துள்ளார் சமுத்திரக்கனி. பவன் கல்யாணின் முந்தைய படங்களின் பல ரெஃபரன்ஸ்கள் இந்த படத்தில் கமர்ஷியலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பவன் கல்யாண் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து படம் 3 நாட்களில் 90 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து 100 கோடி ரூபாயை விரைவில் நெருங்க உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் சம்பவம் on the way… குட் பேட் அக்லி படம் பற்றி வெளியான தகவல்!

அந்த தமிழ்ப் படத்தில் நடித்துள்ளாரா வருண் சக்ரவர்த்தி?

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குகிறாரா கிறிஸ்டோஃபர் நோலன்?

பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

ஸ்ரீதேவி பயோபிக் உருவாகுமா?... கணவர் போனி கபூர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments